Anula freezerbox service ஓவரா மப்பு அடிக்க ஆரம்பிச்சி அதுக்கு அடிமையாகி அதன் பின்னாடியே ஓடி கொண்டிருந்த கால கட்டத்தில் 2023 மே மாதம் விபத்துக்குள்ளாகி மரணம் வரை சென்று 74 நாட்கள் படுக்கையில் இருந்து எழும்ப கூட முடியாமல் படுத்து கொண்டே யோசித்தது தான் இந்த project....... அதன் பின்பு கடவுள் சுத்த கிருபையால் மீண்டு வந்து பல முயற்சிகள் எடுத்து அதில் தோல்வி அடைந்து மறுபடியும் மறுபடியும் முயற்சி செய்து ஆகஸ்ட் மாதம் 15 ம் நாள் Bro. சாமுவேல் அவர்களின் ஜெபத்தின் மூலம் ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த freezer box சேவை மையம்........ சேவைகள்
Since 2000........................
ஒரு நாள் ஒரு போன் வந்தது. தழுதழுத்த குரலில் ஒரு பெண் பேசினார். RV என் மாமா இறந்து போய்ட்டு. Freezer box வேணும் enkeyavathu போய் எடுத்துட்டு வா எனக்கூறி போனை வைத்து விட்டார்கள். Assistant professor ஆட்டோ ஓட்டியதால் எனக்கு தெரியும் என நினைத்து என்னிடம் கேட்டு விட்டார்கள். ஆனால் எனக்கு அது எங்கே கிடைக்கும் என தெரியல. தெரிந்தவர்களிடம் விசாரிக்க அது kings hospital ல கிடைக்கும் என்றார்கள். உடனே ஆட்டோ வில் அங்கே சென்றேன். ஆனால் அங்கு உள்ள freezer box அன்று வெளியே வாடகைக்கு போய் விட்டது. பின்பு மூலச்சல் போனால் கிடைக்கும் என்றார்கள். உடனே ஆட்டோ மூலச்சல் சென்றது. அங்கும் இல்லை. புளிப்பனம் போனால் கிடைக்கும் என்றார்கள். அங்கு சென்றும் இல்லை. கடைசியாக காளியக்காவிளை அருகே ஒரு இடத்தில் கிடைத்தது. அப்போது இது தக்கலை யில் கிடைத்தால் இவ்ளோ தாமதம் ஆயிருக்காது என்று அன்று யோசித்தது இன்று என் கிட்டயே கிடைக்கும் 🥰 இல்லாம கொடி புடிக்கணும் கோடி சம்பாதிக்கணும்னு இதை நான் தொடங்கவே இல்லை என்பதை இங்கே தெரிவித்துக்கொள்ள விளைகிறேன் 🥰--
பல கல்லூரிகளில் Assistant Professor ஆக வேலை செய்து சொந்த காலில் நிற்போம் என அத்தனையும் உதறி தள்ளி விட்டு ஒரே ஒரு ஆட்டோ மூலம் தொழில் தொடங்கினவன் தான் நான். ஆட்டோ ஓட்டும் போது flight ஒட்டுற effect கொடுக்காமல் அழைத்து செல்லும் வடிக்கையாளர்களுக்கு ஆத்ம திருப்தியை அளித்து 30ரூபாய் சவாரி கு செல்லும் போது 300 ரூபாய் சவாரி மிஸ் ஆனாலும் வேறு ஆட்டோ வை அனுப்பி வைத்து விட்டு என் வண்டியில் இருப்பவர்களை பத்திரமாக கொண்டு விட்டு எவ்வளவு தாமதம் ஆனாலும் புன்னகை யோடு கத்திருந்து அவர்கள் போகிற காரியம் வெற்றியாக முடியும் வரை அவர்கள் கூட அவர்களில் ஒருவனாய் இருந்து எனது பணியை கடமையை மிக சரியாக முடித்து சரியான காசை மட்டும் பெற்று வருவது எனது வழக்கம். இது என் ஆட்டோ வை இன்றளவும் அழைக்கும் எதிர்பார்க்கும் ஒரு சில நல்ல உள்ளங்களுக்கு தெரிந்த விஷயம் 🥰🥰🥰 ஆனால் குடி குடியை கெடுக்கும் என்பதற்கு நானும் ஒரு எடுத்துகாட்டு ஆயிட்டேன் கடைசியில் 🥰 ஒரு ஆட்டோ ஒரு குட்டியானை இரண்டு கார்கள் ஒரு மனிதனாக நான்கு வண்டியும் ஒட்டினேன். 🥰 rest இல்லாமலும் தூக்கத்திற்காகவும் முதலில் குடிக்க ஆரம்பித்தேன். நாளடைவில் குடி அதிகம் ஆனது. இதற்கிடையில் ஊரில் திருமண வீட்டிற்கு பெரிதாக சென்றது இல்லை. ஆனால் யார் இறந்தாலும் அங்கு சென்று விடுவது எனது வழக்கம். இப்படி அந்த இறந்த வீட்டிற்கு செல்லும் போது பெட்டி எடுக்க நான் ஆட்டோ வைத்திருந்ததால் என்னிடம் அந்த பொறுப்பை தருவார்கள். நானும் உடனே கிளம்பிடுவேன். கிளம்பும் போது ஒரு குவார்டர் வாங்கி பாதி அடிப்பேன். மீதியை ஆட்டோவில் ஒளித்து வைத்து விட்டு வண்டியை எடுப்பேன். அப்போது இறந்து போன மனிதரின் உறவினர்கள் யாராவது வண்டியில் என்கூட வருவார்கள். அவர்கள் வருத்தத்தில் இறந்து போனவரின் பெருமைகளை கூறி கொண்டே வருவார்கள். அதில் யாராவது ஒருவர் என்னிடம் வண்டியை tasmac(அப்பா குடிப்பகம்) அருகே நிறுத்த சொல்லி உள்ளே சென்று குடிப்பார்கள். அப்போது rv உனக்கு ஒன்னு னு சொன்னதும் நான் சரி என்பேன். அதில் பாதியை குடித்து விட்டு ஆட்டோ நேராக செல்லும் பள்ளியாடி யை நோக்கி. இடையில் கோழிப்போர்விளை அருகே செல்லும் போது அடுத்த tasmac வரும். அங்கேயும் போய் ஒரு visit அடித்து பின்பு பள்ளியாடி போய் சேர்ந்து பெட்டியை எடுத்ததும் பெட்டி கடை owner driver நான் என்பதால் யாருக்கும் தெரியாமல் என் கைக்குள் பணம் தருவார். நானும் அதை வாங்கி விட்டு வண்டியை எடுத்து கொஞ்சம் தூரம் வந்து எவ்வளவு என்று எண்ணி பார்த்தால் மறுபடியும் tasmac செல்ல தேவையான பணம் அதில் இருக்கும். வண்டி நேராக tasmac தான் செல்லும். அங்கு அடுத்த visit. கடைசியில் ஒரு வழியாக பெட்டியை கொண்டு சேர்த்து பிணத்தை அடக்கம் செய்யும் போது நானும் 90% அடக்கத்திற்கு ரெடி ஆகி விடுவேன். எப்படியாவது வீட்டிற்கு வந்து முதலில் வைத்த பாதி குவார்டருடன் வீட்டுக்கு வந்து நான் அடக்கம் ஆகி விடுவேன் 😂😂😂😂 அடுத்த நாள் காலையில் எழும்பி பார்த்தால் ஒரே தலைவலியாக இருக்கும். ஏன் என்றால் பிராந்தி, ரம், beer என எல்லாம் மிக்ஸ்ங்கில் உள்ள போயிருக்கும் 😂. என்னடா இது என்று கூறி தலைவலி தீக்க எப்ப டா மணி 9 ஆகும் AC bar ஓபன் ஆகும் என காத்திருந்து 9 ஆனதும் முதல் ஆளாய் ஓடி போய் கட்டிங் போட்டு இதே pola 3 அல்லது 4 நாட்கள் வேஸ்ட் ஆகும். அப்போது தான் பள்ளியாடி வரை சென்று பெட்டி எடுக்கிறது மிக தூரம். அதே பெட்டி தக்கலையில் கிடைத்தால் ஒரு கட்டிங் மட்டும் போதுமே கடவுளே என்று அன்று யோசித்தது தான் RV பெட்டி கடை. மேலும் தக்கலையில் முதன் முதலில் பெட்டி கடை வைத்த பெருமையும் என்னையே சாரும் என்பது குறிப்பிடத்தக்கது 🥰. ஆனால் சொந்த கடைகள் இல்லாததாலும் ஒரு சில முதலாளிகளின் எதிர்பாலும் RV பெட்டி கடை தக்கலையில் இனிதே முடிவுக்கு வந்தது🤣. ஆனாலும் போன் contact மூலம் கேட்பவர்களுக்கு இன்றும் அந்த சேவை தொடர்கிறது 🥰 Home Page